Also Watch
Read this
By: Web Team

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பெருமாளை வழிபட்டால், எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று, 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவதுமான, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், அதிகாலை முதலே சிறப்பு பூஜை தொடங்கியது.
அதிகாலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாள், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் சன்னதி, தாயார் சன்னதியில் நெய் விளக்கிட்டும், அணையா விளக்கில் தாங்கள் கொண்டு வந்த நெய்யை ஊற்றியும் வழிபாடு செய்தனர்.