news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏரியை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக தகராறு
tv

Also Watch

ஏரியை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக தகராறு

உப்பிலியபுரம், திருச்சி

41

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy tender issue

குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக தகராறு :

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுநாவலூர் பகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (AMMK) ஒன்றிய செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது.

இந்த சம்பவத்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக மாவட்ட பிரதிநிதியுமான சுப்பிரமணியன் மற்றும் கூட்டாளி ஜெயராமன் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.

உப்பிலியபுரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் யோகநாத் உறவினர் வினோத், அப்பகுதியில் உள்ள ஏரியை பொதுப்பணித் துறையில் ஒரு வருட காலத்திற்கு ரூ.1.50 லட்சத்திற்கு குத்தகைக்கு எடுத்து மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார்.

நேற்று இரவு, வாத்தலை பகுதியைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்களுடன் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்து தகராறு செய்தது அவர்கள் பயன்படுத்திய வலை மற்றும் மீன் வாகனங்களை அடித்து நொறுக்கியதாக தெரிகிறது அவர் அடித்து நொறுக்கும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் அதே பகுதியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் யோகநாதன் என்பவரை இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கினர் சம்பவ இடத்தில் இருந்த வாகனத்தையும் சேதப்படுத்தினர்

படுகாயம் அடைந்த யோகநாதன், 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 
சுப்பிரமணியன்மற்றும் ஜெயராமன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், துறையூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் 2026-ல் போட்டியிட சுப்பிரமணியன் விருப்பமனு அளித்திருந்த நிலையில், நேர்காணலுக்கு முன்பே கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
குலதெய்வ கோவிலில் காது குத்தும் நிகழ்ச்சியில் விபரீதம்

குலதெய்வ கோவிலில் காது குத்தும் நிகழ்ச்சியில் விபரீதம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஊக்கத் தொகை ரூ.75 லட்சம் அறிவித்த முதலமைச்சர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved