news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.19.63 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
tv

Also Watch

ரூ.19.63 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

பல்லாவரம், செங்கல்பட்டு

47

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Election Gold

தங்க நகைகள் பறிமுதல் :

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த 407 கூண்டு வாகனத்தை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி வாகனத்தின் டோரை திறந்து சோதனை நடத்தினர்.

அப்பொழுது வாகனத்தில் 24 அட்டைப்பெட்டிகளில் இருந்துள்ளது. அதிகாரிகள் அட்டைப்பெட்டி உள்ளே என்ன இருக்கிறது என கேட்டபோது அனைத்தும் தங்க நகைகள் என தெரிவித்துள்ளனர்.

இதனால் வாகனத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி க்யூரி, தேர்தல் உதவி அதிகாரி செந்தில் முன்னிலையில் வாகனத்தை ஒப்படைத்தனர்.

அதன் பிறகு அதிகாரிகள் வாகனத்தில் எடுத்து வந்த தங்க நகைகளை குறித்து விசாரணை செய்த போது டி நகரில் உள்ள பிரபல தனியார் நகை கடையிலிருந்து நகைகளை எடுத்துக்
கொண்டு திருவள்ளுவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தங்க நகை கடைகளுக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.

மேலும் தேர்தல் அதிகாரி வாகனத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் பிரபல தனியார் நகை கடைக்கு சொந்தமான நகைகளின் மதிப்பு சுமார் 19 கோடியே 63 லட்சம் மதிப்பில் ஆனது என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் எடுத்து வந்த இன்வைஸ் பில்லை சரி பார்த்த வருமான வரித்துறையினர், வாகனத்தில் உள்ள தங்க நகைகளின் அட்டைப் பெட்டிகளையும் சரிபார்த்தனர். அதில் 24 அட்டைப்பெட்டிகள் முழுவதும் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் பிரபல தனியார் தங்க நகை சோரூமில் இருந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சீக்யூல் என்ற நிறுவனம் வாகனத்தில் நகைகளை எடுத்து வந்து பல்வேறு கிளைகளுக்கு சப்ளை செய்வது தெரிய வந்துள்ளது வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
கார் பார்க்கிங் மற்றும் குப்பை தொட்டி வைப்பதில் தகராறு

கார் பார்க்கிங் மற்றும் குப்பை தொட்டி வைப்பதில் தகராறு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி மீண்டும் சாடல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved