Also Watch
Read this
அரசியலுக்கு வர விரும்பிய ரஜினிகாந்தை, திமுக குடும்பம் மிரட்டியது என்று, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார்.

தவெக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாவட்டத் தலை நகரங்களில் தவெக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்ஜிஆருக்கு பின்னர்...
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
எம்ஜிஆருக்கு பின்னர், ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து, சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பியவர். எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தவர். ஆனால், திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வர விடாமல் பார்த்துக் கொண்டனர்.

தனிப்பட்ட விமர்சனம், விஜய் பயப்படவில்லை
இன்று என்ன ஆனது? கடைசியில் நடிக்க போய்விட்டார். ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால், அந்த மனவலிமை, விஜய்யிடம் இருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கரூர் சம்பவத்திற்கு பின்னரும் நாங்கள் வெளியில் வந்து விட்டோம். தனிப்பட்ட விமர்சனங்கள் முன் வைத்த போது, பயந்து கொண்டு, வீட்டில் அமைதியாக உட்காரவில்லை.

காலணி வீசப்பட்டது ஏன்?
மகளிர் தினத்தன்று 12 வாக்குறுதிகளை, விஜய் வெளியிட்டார். அதேபோல் கரூரில் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தின் போது மட்டும் காலணி வீசப்பட்டது ஏன்? மற்ற ஊர்களில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. திருவாரூரில் விஜய்க்கு வந்த கூட்டத்தை பார்த்து திமுகவுக்கு அச்சம். எனக்கு மட்டும் ஏன் சம்மன் என்று செந்தில் பாலாஜி கேட்கிறார், அவர் தான் முதல் குற்றவாளி.
இவ்வாறு ஆதவ் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved