Also Watch
Read this
புதுச்சேரி, கருவடிக்குப்பம் அருகே, கிழக்கு கடற்கரைச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த பிரபல ரவுடி, 8 பேர் கும்பலால் பட்டப்பகலில் பயங்கரமாக வெட்டிக் கொ* செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக பிரமுகர் கொ* வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்த ரவுடி, பழிக்குப் பழியாக கொ* செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்துள்ள நிலையில், சம்பவத்தின் முழு பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கண்ணிமைக்கும் நேரத்தில்...
கருவடிக்குப்பம் கோமாதா கோயில் பகுதியை சேர்ந்தவன் 32 வயதான ஆனந்த். பிரபல ரவுடியாக வலம் வந்த இவன் மீது 2 கொ* வழக்குகள், அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கருவடிக்குப்பம், சிவாஜி சிலை மற்றும் கிருஷ்ணா நகர் அருகில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆனந்தை, நாலைந்து பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த 8 பேர் கும்பல், அவரை இடித்து தள்ளியது. தம்மை சுத்து போட்டதை தெரிந்து கொண்டு சுதாரிப்பதற்குள், ஆனந்தை அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி கொ* செய்துவிட்டு தப்பிச் சென்றது.

பழிக்குப் பழியா?
பட்டப்பகலில் நடந்த கொ* சம்பவத்தின் பதைபதைக்கும் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லாஸ்பேட்டை போலீசார், ரவுடி ஆனந்தின் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த ஆண்டு, புதுச்சேரி நவீனா கார்டன் பகுதியில் நடந்த பாஜக பிரமுகர் விக்கி கொ* வழக்கில், ஆனந்த் முக்கிய குற்றவாளியாக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், அந்த கொ*க்கு பழிவாங்கும் வகையில் ரவுடி ஆனந்த் கொ* செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தின் பிறந்தநாள் அன்று, அவரை பட்டப்பகலில் வெட்டிக் கொ*ற சம்பவம் புதுச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved