news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

இந்தியா சார்பில் மராத்தி திரைப்படம் தேர்வு

இசைஞானி இளையராஜா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கோந்தல்

இளையராஜா இசையில் உருவான கோந்தல் திரைப்படம்

2027-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் மராத்தி திரைப்படமான கோந்தல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா இசையில் சந்தோஷ் தாவகார் எழுதி இயக்கியுள்ள இப்படம், மகாராஷ்டிராவின் கிராமப்புற பின்னணியில் பாரம்பரிய சடங்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான கோந்தல் படம் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருதைப் பெற்றது.

துருவ் விக்ரம் நடிக்கும் ஜாக்கி திரைப்படம்

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் புரோமோ வெளியாகியுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இந்தப் படத்தில், ஆபத்தான சண்டைக் காட்சிகளில் ஹீரோவுக்கு பதிலாக நடிக்கும் ஸ்டண்ட் கலைஞர் கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டோரதி படத்தின் டிரெய்லர் வெளியீடு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள டோரதி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். நட்பு, காதல் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Link
குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தை விற்று ஐபோன் 18 ப்ரோ வாங்கிய நபர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved