Also Watch
Read this
By: Manigandan Raja

15,000 ரன்களை கடந்த முதல் வீரரானார்
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் முதல் வீரராக 15 ஆயிரம் ரன்களை கடந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லர் புதிய சாதனை படைத்துள்ளார். 528 டி-20 போட்டிகளில் ஆடிய பட்லர் இச்சாதனைக்கு சொந்தக்காரரானர்.
754 போட்டிகளில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பொல்லார்ட் 14 ஆயிரத்து 999 ரன்களுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
சித்தி விநாயக் கோயிலில் ஜாகீர் கான் சுவாமி தரிசனம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தனது மனைவி சகாரிகாவுடன்(( Sagarika)) மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயக் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சஞ்சுவுக்கு வாய்ப்பளிக்காதது மிக கடினமாக முடிவு
இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க முடியாமல் போனது தான் எடுத்த கடினமான முடிவு என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரின் முதல் போட்டியில் சாம்சனின் மோசமான ஆட்டம் காரணமாக வைபவ் சூர்யவன்ஷிக்கு 2வது போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved