news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதமென பிரிந்தது போதும்.. இதுதாங்க உண்மையான இஃப்தார்
tv

Also Watch

மதமென பிரிந்தது போதும்.. இதுதாங்க உண்மையான இஃப்தார்

மயிலாடுதுறை

30

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
myd 4(1)

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இணைந்து நோன்பு திறந்தனர். உலக அமைதிக்காக சிறப்பு தொழுகை நடத்தினர்.

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு வைத்தல், புனித ரமலான் மாதம் தொடங்கி நோன்பு கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மும் மதத்தினர் சேர்ந்து வழிபாடு
செம்பானார்கோவிலில் வணிக நிறுவனம் நடத்தி வரும் ஷாஜகான் தலைமையில் நடைபெற்ற இந்த நிழ்கழ்ச்சியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மும் மதத்தினர் மற்றும் வணிகர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

உலகில் அமைதி நிலவ வேண்டுதல்
நிகழ்ச்சியின் போது தற்போது உலக நாடுகளில் நடைபெற்று வரும் போர்கள் விரைவில் நிறுத்தப்பட வேண்டும், உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் வணிகம் மற்றும் விவசாயம் செழித்து மக்களின் வாழ்க்கை முன்னேற வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பேரிச்சம்பழம், பழம் வகைகள் மற்றும் நோன்பு கஞ்சி அருந்தி, நோன்பு திறந்தனர்.

Related Link
விளம்பர வெறி - அண்ணாமலை சாடல்

விளம்பர வெறி - அண்ணாமலை சாடல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved