Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
வி.சத்திரப்பட்டியை சேர்ந்த பிரபாகரன், ஆணவக் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு குண்டாஸில் சிறையில் இருந்தார்.
சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த அவர் முறையாக ஆஜராகாமல் தலைமறைவானார்.
இதனால் போலீசார் பிரபாகரனின் தந்தையை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதனை அறிந்த அவர் தனது நண்பரோடு காவல் நிலையம் சென்று காவலர் பால்பாண்டியை மிரட்டிவிட்டு பொருட்களையும் சேதப்படுத்தினார்.
இவர்கள் விருதுநகரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்ற போலீசார் இருவரையும் கைது செய்ய முயன்றபோது தப்பி ஓட முயற்சித்த பிரபாகரனுக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டது.