Also Watch
Read this
By: Manigandan Raja

விவசாயிகள் புகார் :
அவ்வப்போது பெய்து வரும் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அரசு தலையிட்டு நல் மனநிலை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை.
மூன்று நாட்களுக்குள் நெல்மணிகளை கொள்முதல் செய்யாவிட்டால் சாலை மறியல் ஈடுபடுவதோடு வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக விவசாயிகள் எச்சரிக்கை.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பூதூர் ஊராட்சியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த ஆண்டு விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் நெல்மணி விவசாயம் செய்து தற்பொழுது அறுவடை செய்து பூதூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தில் விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை அறுவடை செய்து கொட்டி வைத்துள்ளனர்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இக்கிராமத்திற்கு வந்து சுமார் 20 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுநாள் வரை இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செய்யாததால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் அவ்வப்போது பெய்து வரக்கூடிய மழையால் அறுவடை செய்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மழையில் நனைந்து சேதம் அடைவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த புதூர் கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வரக்கூடிய நிலையில் தற்பொழுது 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் பயிரிட்ட நெல்மணிகளை அறுவடை செய்துள்ளனர்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் குவிந்து உள்ள நிலையில் மீதமுள்ள நெல்மணிகளை விவசாயிகள் மாநில நெடுஞ்சாலை
ஓரத்தில் நெல்மணிகளை குவித்து வைத்திருப்பதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக பூதூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செயல்படுத்தி கொள்முதல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள நெல்மணிகளை உடனடியாக
கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு அதிகாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகளை எடுக்காவிட்டால் விரைவில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை விவசாயிகள் ஒன்று கூடி புறக்கணிக்கப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved