news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews இன்றைய திரைத்துறைச் செய்திகள்
tv

Also Watch

tv

Read this

இன்றைய திரைத்துறைச் செய்திகள்

நீளிரா

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா செய்திகள்

பிரபாஸின் ”பௌசி” படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிவு : 

சீதா ராமம் பட இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'பெளசி' என்ற படத்தின், படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள படக்குழுவினர், ரகசியமாகப் படம் பிடிக்கப்படும் காட்சிகளை இணையத்தில் பகிர்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ.1000 கோடி வசூலை கடந்த துரந்தர்-2 : 

துரந்தர் - 2 திரைப்படம் வெளியான 18 நாட்களில், இந்திய அளவில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பாகுபலி 2 திரைப்படம் உள்நாட்டில் 1,000 கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சாதனையை துரந்தர்-2 திரைப்படம் முறியடித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் பற்றி பேசும் படமாக உருவான ”நீளிரா” :

இந்திய சினிமாவில் முதன்முறையாக உருவாகியுள்ள ஈழத் தமிழ் திரைப்படமான நீளிரா-வுக்கு ஆதரவு தர வேண்டும் என அதன் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழத்து போரைச் சார்ந்த உண்மையான கதையையும், படைப்புகளையும், படைப்பாளிகளையும் உலக சினிமா அரங்குகளில் அவர்களின் குரல் கேட்கும் வகையில் ஒரு இடம் உருவாக்க வேண்டும் என்பதே இப்படத்தின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

யூத் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் :

யூத் திரைப்படம் வரும் 17-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. கென் கருணாஸ் இயக்கத்தில் சிறந்த பொழுதுபோக்கு படமாக வெளியான யூத், இதுவரை 68 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான முட்ட கலக்கி பாடல் இணையத்தில் தற்போது வரை டிரெண்டிங்கில் உள்ளது.

Related Link
விரைவில் திருமணமா? நடிகை திரிஷா விளக்கம்

விரைவில் திருமணமா? நடிகை திரிஷா விளக்கம்





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

10
15 hrs 35 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved