news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews இன்றைய உலகளாவியச் செய்திகள்
tv

Also Watch

tv

Read this

இன்றைய உலகளாவியச் செய்திகள்

ஈரான்

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வெளிநாட்டு செய்திகள் 1

மின் உற்பத்தி நிலையத்திற்கு வெளியே கச்சேரி நடத்திய கலைஞர் : 

ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் தாக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஈரானிய இசைக் கலைஞர் ஒருவர் மின் உற்பத்தி நிலையத்திற்கு வெளியே அமர்ந்து கச்சேரி நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

தாம் விதித்த காலக்கெடுவுக்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் டமாவந்த் மின் உற்பத்தி நிலையத்திற்கு வெளியே, அலி கம்சாரி என்ற கலைஞர் பாரம்பரிய பாரசீக இசைக் கருவியான Taar-ஐ இசைத்து ட்ரம்ப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆர்டெமிஸ் II குழுவினருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து : 

விண்வெளியில் இதுவரை யாரும் செல்லாத ஆழத்திற்கு பயணித்து சரித்திரம் படைத்ததன் மூலம் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் பெருமைப்படுத்தியுள்ளதாக ஆர்டெமிஸ் II குழுவினருக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நிலவின் மறுபக்கத்தின் வழியாக விண்வெளி குழுவினர் பயணித்தபோது, பூமியில் இருந்து 2 லட்சத்து 52 ஆயிரத்து 756 மைல்கள் என்ற சாதனை தூரத்தை அடைந்தனர்.

காணொளி மூலம் பேசிய டிரம்பிடம், எந்த ஒரு மனிதரும் கண்டிராத காட்சிகளை தாங்கள் கண்டதாகவும், அது மிகவும் ஆச்சரியமாக இருந்ததாகவும் ஆர்டெமிஸ் குழுவினர் தெரிவித்தனர். விண்வெளி வீரர்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், உங்களிடம் கையெழுத்து கேட்பேன் என்றும் அதிபர் கூறினார்.

அமைதி ஒப்பந்தத்தை பூர்த்தி செய்ய ஈரானுக்கு காலக்கெடு : 

தமது அமைதி ஒப்பந்தத்திற்கான காலக்கெடுவை பூர்த்தி செய்யாவிட்டால், ஈரானில் உள்ள அனைத்துப் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை 4 மணி நேரத்திற்குள் அழிப்பதற்கான போர் திட்டங்களை அமெரிக்க ராணுவம் வைத்திருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானை மணிக்கு ஒருமுறை மிரட்டி வரும் டிரம்ப், செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணிக்குள் ஈரானில் உள்ள ஒவ்வொரு பாலமும் முற்றிலுமாக அழிக்கப்படும் என்றும், ஒவ்வொரு மின் நிலையமும் வெடித்துச் சிதறி, மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே, டிரம்ப் ஈரானுக்கு செவ்வாய்கிழமை இரவு 8 மணி வரை காலக்கெடு விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு இன்று இரவு 8 மணி வரை இறுதிக் கெடு :

ஈரானுக்கு இன்று இரவு 8 மணி வரை இறுதிக் கெடு விதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடன்பாட்டுக்கு வரவில்லை என்றால், அங்குள்ள பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்பட்டு கற்காலத்திற்கு ஈரான் தள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இது ஒரு மிக முக்கியமான காலகட்டம் என்றவர், ஈரானுக்கு இன்று இரவு வரை அவகாசம் உள்ளதாக கூறினார். இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றவர், இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த ஈரான் அமைச்சகம் : 

ஈரானுக்கு அதிபர் டிரம்ப் விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைத்து காக்குமாறு இளைஞர்களுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் உள்கட்டமைப்புகள், மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில், பொது உள்கட்டமைப்பைத் தாக்குவது ஒரு போர்க்குற்றம் என்று கூறி இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் குடிமக்களை மனித சங்கிலி அமைக்குமாறு ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் மூலம் 10 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான் :

அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த ஈரான், தற்போது போரை முடிவுக்கு கொண்டுவர பத்து நிபந்தனைகளை பாகிஸ்தான் மூலம் முன்வைத்துள்ளது. போரை நிறுத்த பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்க மறுத்த ஈரான் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என உறுதியாக உள்ளது.

போரை முழுமையாக நிறுத்தினால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்த ஈரான், போரால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சீரமைப்பதற்கான நிதியுதவி மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் படைகள் அவசர எச்சரிக்கை :

அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கக்கோரி ஈரானியர்களுக்கு இஸ்ரேல் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து மத்திய கிழக்கில் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு மக்களுக்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளன.

பாரசீக மொழியில் வெளியிட்டப்பட்ட எக்ஸ் தள பதிவில், குறிப்பிட்ட பகுதிகளையோ அல்லது வழித்தடங்களையோ குறிப்பிடாமல் , ஈரான் முழுவதும் பரவலாகப் பொருந்தும் என்றும், மீறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஜ்தபா கமேனி சுயநினைவின்றி இருப்பதாக தகவல் :

ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்சபட்சத் தலைவர் மொஜ்தபா கமேனி சுயநினைவின்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அயதுல்லா அலி கமேனியின் உயிரிழப்புக்குக் காரணமான அதே அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாகவும், தற்போது கும்(Qom) நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தான் மொஜ்தபா கமேனியால் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் முடிவுகளில் பங்கேற்க இயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நகரம் தெஹ்ரானுக்குத் தெற்கே 87 மைல் தொலைவில் அமைந்துள்ளதுடன், ஷியா இஸ்லாமியக் கோட்பாடுகளின்படி புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது.

மீட்கப்பட்ட விமானி குறித்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் : 

அமெரிக்காவின் வாஷிங்டனில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிபர் டிரம்ப், அரசாங்கத்திற்குள் உளவாளி இருப்பதாக கூறி அதிர வைத்தார். ஈரானில் இருந்து சமீபத்தில் மீட்கப்பட்ட 2 விமானி குறித்து செய்தியாளர்களிடையே பேசிய டிரம்ப், விமானி குறித்த தகவலைக் கசியவிட்டவரைக் கண்டுபிடிக்க அரசு முயற்சித்து வருவதாக கூறினார்.

அமெரிக்க விமானப்படை விமானியை தேடி வருவதாக முதலில் செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனம் , தங்களது தகவல் மூலத்தை வெளிப்படுத்தாவிட்டால் விரைவில் சிறைக்குச் செல்ல நேரிடும் என எச்சரித்தார்.

விமானி குறித்த செய்தியை நியூயார்க் டைம்ஸ், ஃபாக்ஸ் நியூஸ் ((Fox News ))மற்றும் ஆக்சியோஸ் (( Axios)) உள்ளிட்ட ஊடகங்கள் முதலில் வெளியிட்டிருந்தாலும், டிரம்ப் எந்தவொரு ஊடகத்தையும் தனியாகக் குறிப்பிடவில்லை.

Related Link
இன்றைய வெளிநாட்டு செய்திகள்

இன்றைய வெளிநாட்டு செய்திகள்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
6 hrs 42 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved