news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தீடீரென இடிக்கப்பட்ட விநாயகர் கோயில்
tv

Also Watch

தீடீரென இடிக்கப்பட்ட விநாயகர் கோயில்

தூத்துக்குடி

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tut

குரும்பூர் ரயிலடி விநாயகர் கோயில் திடிரென இடிக்கப்பட்டதால், தடுக்க முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் பதட்டமான சூழ்நிலை இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் ரயில் நிலையம் அருகில் விநாயகர் கோவில் ரயில்வே இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற உத்தரவுப்படி ரயில்வே நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று இடிக்க போவதாக தகவல் வெளியானது இதனால் இந்து முன்னணியினர் பொதுமக்கள் என சுமார் 100 பேர் கோவில் முன்பு குவிந்தனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். பதட்டமான சூழ்நிலை உருவானதால் தற்காலிகமாக கோவிலை இடிக்கும் பணியை ஒத்தி
வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் கோவில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. தடுத்து நிறுத்த வந்த இந்து முன்னணியினரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் போலீஸ் வாகனத்தில் சென்று திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்துள்ளனர். சுமார் 100 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது. விநாயகர் சிலையை போலீசார் காலில் ஷூ அணிந்து கொண்டு தூக்கிச் சென்றதால் பொதுமக்களிடையே வேதனை ஏற்படுத்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவாரூரில் திடீர் கனமழை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved