Also Watch
Read this
By: Web Team

சென்னை பள்ளிக்கரணை முதல் நாராயணபுரம் வரையிலான குறுகலான சாலையில் ஒரே நேரத்தில் அதிகளவிலான வாகனங்கள் வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வழக்கமாக இப்பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது நண்பகல் நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.
இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், குறுகலான சாலையை விரிவுபடுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved