Also Watch
Read this
By: Manigandan Raja

கொடைக்கானலில் மழை :
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. குறிப்பாக இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில்
நண்பகல் வேளையில் சட்டென்று மாறிய காலநிலையால் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் ஏரியில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள் திடீரென்று பெய்த மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்தனர். குறிப்பாக பேருந்து நிலையம், ஏரிச்சாலை நாயுடுபுரம் , மூஞ்சிகல், அண்ணா சாலை,
சீனிவாசபுரம் மற்றும் கிராமப்புற பகுதிகளான வில்பட்டி , அட்டுவம்பட்டி பள்ளங்கி, கோவில்பட்டி போன்ற கிராம பகுதிகளிலும் மிதமான சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மிதமான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழலில் நிலவுவதால் உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.