news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எச்ஐவி விழிப்புணர்வு தீவிர பிரச்சார இயக்கம்
tv

Also Watch

எச்ஐவி விழிப்புணர்வு தீவிர பிரச்சார இயக்கம்

திருப்பத்தூர்

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tpr 1 1

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் எச்ஐவி விழிப்புணர்வு தீவிர பிரச்சார இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்ட அளவில் எச்ஐவி அதிதீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளாக வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும் கிராமிய கலை நிகழ்ச்சிகளையும் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு எச்ஐவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய கலைக்குழுக்கள் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சி பயணத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இன்று ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12 வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் 60 நாட்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எச்ஐவி நிலை திருப்பத்தூர் மாவட்டத்தில் சக்ஸெம் நிலையில் இருந்து சுரக்ஷித் இலக்கினை அடைய அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் ஞானமீனாட்சி, மாவட்ட திட்ட மேலாளர் கவிதா, மாவட்ட சுகாதார அலுவலர் கலுசிவலிங்கம் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கு பெற்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ்நாடு பாடநூல் கிடங்கு ஆய்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved