news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மீண்டும் அமோக வெற்றி பெறுவேன் - ஸ்டாலின் உறுதி
tv

Also Watch

tv

Read this

மீண்டும் அமோக வெற்றி பெறுவேன் - ஸ்டாலின் உறுதி

மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல், கொளத்தூரில் பரப்புரை

26

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான தன்னை, கொளத்தூர் தொகுதி மக்கள் மீண்டும் அமோக வெற்றிபெற வைப்பார்கள் என்று, வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் கூறினார்.

நான்காவது முறையாக கொளத்தூர் தொகுதியில்...
சென்னை, கொளத்துார் தொகுதியில் போட்டியிடுவதற்கு, முதல்வர் ஸ்டாலின் இன்று மார்ச் 30ஆம் தேதி, வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;
நான்காவது முறையும் கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் என்னை, அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். எப்போதும் போல பிரசாரம் வலுவாக இருக்கும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

உற்சாக வரவேற்பு
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு, திறந்த வெளி வாகனத்தில் சென்று முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் ஓட்டு சேகரித்தார். அவருக்கு கொளத்தூர் தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது 5 ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனையை எடுத்துரைக்கும் புத்தகத்தை பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு
தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நான்கு நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதால் வேட்பாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். கொளத்தூர் தொகுதியில், தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செம்பியம் ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் அலுவலரிடம் தமது வேட்பு மனு தாக்கல் செய்தார். கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் முடிந்த கையோடு கருப்பு, சிவப்பு நிற பரப்புரை வாகனத்தில் ஏறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை வலம் சென்று தொகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

Related Link
திருமாவளவன் வைத்த சஸ்பென்ஸ், மாநில அரசியலுக்கு வருகிறார்

திருமாவளவன் வைத்த சஸ்பென்ஸ், மாநில அரசியலுக்கு வருகிறார்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

4
10 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved