news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews விஜய் பாஜக கூட்டணிக்கு சென்றால்...
tv

Also Watch

tv

Read this

விஜய் பாஜக கூட்டணிக்கு சென்றால்...

திருவாரூர்

13

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvr3

விஜய் பாஜக கூட்டணிக்கு சென்றால் அரசியல் எதிர்காலம் மற்ற ஒரு நிலை உருவாகும். திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெர்வித்துள்ள்ளார்.திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிபிஐ விசாரணை கேட்டது விஜய். இப்பொழுது அதிலிருந்து வெளியே வர முடியாமல் அவர் சிக்கிக் கொண்டுள்ளார்.

விஜய் சிக்கி கொள்வாரா?
இந்த வாய்ப்பை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துகிறது. தங்களுடைய அரசியல் சுயலாபத்திற்காக விஜய்யை தன்னுடைய அணிக்குள் கொண்டு வருவதன் மூலமாக, நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் அணிக்கு ஒரு வாய்ப்பான சூழ்நிலை ஏற்படுத்த முடியுமா என்கிற முறையில் விஜய்யை பாஜக அதிமுக அணிக்குள் கொண்டு வருவதற்கான கடுமையான முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதைப்பற்றி உறுதியாக முடிவெடுப்பது விஜய் தான். அதில் அவர் உறுதியாக இருப்பாரா? தனித்து நிற்பாரா? இல்லை அந்த அணிக்கு சென்று சிக்கிக் கொள்வாரா சில தினங்களில் தெரியும் என கூறினார்.

எதற்காக இடதுசாரிகளுக்கு சீட்டு குறைக்க வேண்டும்?
காங்கிரசுக்கு கூடுதலாக தொகுதி கொடுத்ததை நாங்கள் கேட்கவில்லை, காங்கிரஸ் 28 தொகுதிகள் அல்ல 60 தொகுதிகள் வேண்டுமானாலும் கேட்டு வாங்கிக் கொள்ளட்டும். காங்கிரசுக்கு கூடுதல் தொகுதி கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிற பொழுது எதற்காக இடதுசாரிகளுக்கு சீட்டு குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கேள்வி என தெரிவித்த சண்முகம், அதிமுகவில் கூட்டணி குறித்து பேசுவதற்கு நேற்று தான் குழுவே அமைத்துள்ளார்கள் ஆனால் திமுக கூட்டணியில் பல கட்சிகளுடன் உடன்பாடு முடிந்து விட்டது. இன்னும் ஒரு சில கட்சிகளுடன் தான் உடன்பாடு முடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

திமுகவிற்கு தான் பலம்
பாஜக அதிமுக கூட்டணியில் விஜய் இணைந்தால் திமுக அணிக்கு பலம் தான், ஏனென்றால் விஜய் ஆதரிப்பவர்கள் எல்லாம் திமுக, அதிமுக அல்லாத ஒரு புதிய முதலமைச்சர் அவர் தனித்து ஆட்சி அமைப்பார் என விருப்பம் தெரிவித்துள்ளனர், அவர் இன்னொருவருடன் போய் சேர்ந்தால் அவருக்கு ஆதரவு இருக்காது. அவர் அங்கு போய் சேர்ந்தால் முதலமைச்சர் என்பதற்கு வாய்ப்பும் கிடையாது. விஜய் பாஜக கூட்டணிக்கு சென்றால் அரசியல் எதிர்காலமற்ற ஒரு நிலை உருவாகும் என கூறிய அவர், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு ஒரு திட்டமிட்ட கருத்து திணிப்பு என காட்டமாக தெரிவித்தார்.

Related Link
அழுது மன்றாடும் இளம்பெண்

அழுது மன்றாடும் இளம்பெண்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செல்போனை இழந்த பக்தர் வேதனை

0
17 mins agoshare
செல்போன் திருடியதாக குற்றச்சாட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved