news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews முதல்வர் விஜய் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

முதல்வர் விஜய் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என வலியுறுத்தல்

திருப்பூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பொள்ளாச்சி ஜெயராமன்

நாவடக்கத்துடன் பேச வேண்டும் : 

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த வருத்தத்தில், தஞ்சாவூர் அதிமுக நிர்வாகி மகேந்திரன் ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்டார். அவருக்குத்
திருப்பூரில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், மாநகர மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், அதிமுக இயக்கம் மிகப்பெரும் வரலாறு கொண்ட இயக்கம்.

ஒரு நடிகன் நாடாளாம், குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என காட்டியது அதிமுக தான். அப்பேர்ப்பட்ட இயக்கத்தை யாரும் குறை கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்த கட்சி துவங்கிய காலத்தில் பிறக்காதே நடிகர் விஜய், ஏதோ அடித்த காற்றில் வெற்றி பெற்று மைனாரிட்டி ஆட்சியாக, திமுக கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். நடிகர் விஜய் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.

நன்றி சொல்லப் போன இடத்தில் இந்த ஒரு மாத காலத்தில் ஆட்சியில் மக்களுக்கு என்னென்ன நல்லது செய்தோம் என்று கூறி வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லாமல்,
தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி அதிமுகவை மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

இதற்காக நாங்கள் எச்சரிக்கை செய்ய கடமை பட்டு உள்ளோம். கடந்த ஒரு மாத கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுமோசமடைந்துள்ளது பெண்களுக்கு பாதுகாப்பு பெற்ற சூழல் உள்ளனர். பெண்களை பாதுகாப்பதற்காக சிங்க பெண்கள் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்த முதல்வர் அதனை கிடப்பில் போட்டுள்ளார்.

இதனால் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை. திருவண்ணாமலையில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. அதை வைத்து அந்த பெண்களை மிரட்டி உள்ளனர்.

தூத்துக்குடியில் தவெக நிர்வாகி வேலை வாங்கி தருவதாக ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை அடக்குவதை விடுத்து அதிமுகவை குறை சொல்வதை முதல்வர் விஜய் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு அறிவித்த திட்டங்களை விஜய் நிறைவேற்ற வேண்டும் குறிப்பாக மகளிர்க்கு 2500 ரூபாய் கிடைக்குமா என்ற எண்ணம் எழுந்துள்ளது.

அதேபோல் இலவச பேருந்து திட்டம் வருமா என்றும் தெரியவில்லை விவசாயிகளுக்கான கடனை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிக்கையில் கூறிய விஜய் தற்பொழுது அதனை செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறார் இதன் காரணமாக விவசாயிகளின் போராட்டம் தமிழகத்தில் வெடித்துள்ளது.

தமிழக மக்கள் எங்களை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடங்கள்தான் அதிகமாக பறிபோய் உள்ளது.
தற்போதைய சூழலில் தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள் அவர்களுக்கான திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

பிரதமரை பார்க்க டெல்லி சென்ற விஜய் வெறும் ஏழு நிமிடங்களில் சந்திப்பை முடித்துக் கொண்டார். அவர் அங்கிருந்து தமிழ்நாட்டுக்காக எந்த நிதியையும் பெற்று
வரவில்லை.

தமிழகத்தின் பிரச்சனைகளை பேச குறைந்தது 45 நிமிடங்கள் ஆவது பிரதமருடன் அமர்ந்து பேசி இருக்க வேண்டும் அல்லது திட்டங்களை பற்றி பேச அரசு அதிகாரிகளை அழைத்துச் சென்று இருக்க வேண்டும் அதனை விடுத்து அவருடைய மேக் அப் மேன் நண்பர்களை டெல்லி அழைத்துச் செல்வது எந்த வகையில் ஏற்கத்தக்கது என்று
தெரியவில்லை.

அதிமுக இயக்கத்தை பொருத்தவரை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து வீறு கொண்டு வெற்றி நடை போடுவோம் உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி இடைத்தேர்தல்களிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

லாட்டரி உதவியோடு ஆட்சி அமைத்துள்ள விஜய் நிச்சயம் ஒரு நாள் வருத்தப்படுவார் ஏதோ ஒரு நாலுபேர் விலை போய் விட்டதால் இந்த இயக்கம் அழிந்து
விடாது பீனிக்ஸ் பறவையாக அதிமுக இயக்கம் மீண்டு வரும் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் இந்த மைனாரிட்டி ஆட்சி ஐந்தாண்டுகள் நிச்சயம் நடக்காது.

நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வோம். தமிழக வெற்றி கழகத்தின் தவறுகளை நிச்சயம் சுட்டிக் காட்டுவோம்.

இந்த கட்சி தோன்றிய போது பிறக்காத ஒரு நபர், இந்த கட்சியின் அருமை பற்றி தெரியாத ஒரு நபர், நான்கு சுவற்றுக்குள்ளேயே இருக்கும் ஒரு நபர், எங்கள் கட்சியின் பேரை சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன? என் கட்சியின் பேரை சொல்வதற்கு கூட அவருக்கு தகுதி இல்லை.

எங்களுடைய அண்ணன் தம்பி சண்டை அனைத்தும் ஒன்றாகிவிட்டது. நேற்று நடந்த சம்பவத்தில் தூரத்தில் இருந்து வந்த ஒரு தொண்டர் என்ன நடக்கிறது என்று
தெரியாமல் பேசிவிட்டார்.

அது ஒரு பெரிய விஷயம் அல்ல. மாற்றம் தருவேன் என்று தானே விஜய் வந்தார் அப்போது அதனை தர வேண்டும் தானே ஆனால் அவர் என்ன செய்தார். முதல்வர் பதவியில் உள்ள ஒருவர் இதுபோன்று ஆணவ பேச்சு பேசுவது ஏற்புடையதல்ல, தான் என்று அகந்தையில் பேசுவது. மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

இப்படி மட்டம் தட்டி பேசுவது பயத்தின் வெளிப்பாடு இதுபோன்று மட்டம் தட்டி பேசினால் இந்த கட்சி காணாமல் போய்விடாது பூதாகரமாக மீண்டு வரும். திமுக
மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்த விஜய் தற்பொழுது ஆட்சிக்காக திமுக கூட்டணி கட்சி இடமே பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சி
அமைத்துள்ளார்.

இது இவ்வளவு பெரிய வெட்கக்கேடு. இப்படிப்பட்ட நபர் எங்களைப் பற்றி பேச என்ன யோகிதை உள்ளது. இன்ஸ்டாகிராம் மயக்கத்தால் ஆட்சிக்கு வந்துள்ளார். இதுவரை நிருபரை சந்தித்துள்ளாரா? மக்களை ஏதோ ஜலத்தில் மயக்கியுள்ளார் இது எவ்ளோ நாளைக்கு நீடிக்கும்.

இப்போது நடக்கின்ற ஆட்சியில் சாட்சி அது ரியல் ஆட்சியாக மாற வேண்டும் என தெரிவித்தார்.

Related Link
காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி - தவெக அறிவிப்பு

காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி - தவெக அறிவிப்பு

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேட்பாரற்று அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள்

0
28 mins agoshare
ரேஷன் அரிசி மூட்டைகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved