news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews லஞ்சம் வாங்கிய பெண் VAO லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
tv

Also Watch

tv

Read this

லஞ்சம் வாங்கிய பெண் VAO லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது

சேரன்மகாதேவி, நெல்லை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது : 

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த மூக்காண்டி என்பவர் தனியார் நிதி நிறுவனம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் இதற்காக லைசன்ஸ் கேட்டு சேரன்மகாதேவி
கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனியிடம் லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் ரூ.10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் மட்டுமே லைசென்ஸ் தர முடியும் என இதயக்கனி கூறியதாக தெரிகிறது. லஞ்சம் பெற்று கொடுக்க இதயக்கனிக்கு வெங்கடேசன் என்பவர் புரோக்கர் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.


ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத மூக்காண்டி இது குறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார் எனவே லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி இன்று ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் பணத்துடன் மூக்காண்டி புரோக்கர் வெங்கடேசனுடன் கிராம நிர்வாக அலுவலகம் சென்றார்.

அங்கு மூக்காண்டி இதயக்கனியிடம் பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த ஆய்வாளர் ராபின் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இதயக்கனி மற்றும் புரோக்கர் வெங்கடேசனை கையும் களவுமாக கைது செய்தனர் தொடர்ந்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Link
முதல்வர் விஜய் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என வலியுறுத்தல்

முதல்வர் விஜய் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என வலியுறுத்தல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேட்பாரற்று அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள்

0
26 mins agoshare
ரேஷன் அரிசி மூட்டைகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved