Also Watch
Read this
By: Manigandan Raja

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஒரு சூறாவளி காற்று அடித்து சுமார் 500 ஏக்கரில் சாகுபடி
செய்யப்பட்டிருந்த, 75-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமாயின. வாழை விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருந்து வரும் நிலையில்.
இதை அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு
ஆறுதல் கூறி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கும்போது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் மற்றும் திருவையாறு ஒன்றியத்தில் நெல் சாகுபடி பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருவது என்பதால், பெரிய அளவிற்கு
விவசாயிகள் வாழை சாகுபடி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த ஆண்டு இயற்கை சீற்றத்தால் சூறைக்காற்றால் வாழை சாகுபடி என்பது, இன்னும் ஒரு வார காலத்தில் வாழைக்காய் வெட்டும் தருவாயில் இருந்த சூழ்நிலையில்
செவ்வாழையும், பூவந்தாரும் பெரும் அளவிற்கு சேதாரம் ஆகி உள்ளது.
பல இடங்களில் வாழை மரங்கள் முழுமையாக முறிந்து விழுந்துள்ளது. அங்கு சென்று பார்க்கும் பொழுது விவசாயிகள் வடித்த கண்ணீர் எங்களுக்கே பரிதாபமாக இருந்தது.
வாழை சாகுபடிக்கு ஒரு ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஒன்னேகால் லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறார்கள். அவர்கள் விற்பனை செய்திருந்தால்
மேற்கொண்டு இரண்டு லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். தற்போது மூலதனத்தையும் லாபத்தையும் சேர்த்து இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை
சந்தித்திருக்கிறார்கள்.
இன்னும் பெரிய வேதனை என்னவென்றால் சொந்த சாகுபடி என்பது குறைவு. மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து, இந்த ஆண்டாவது கிடைக்கக்கூடிய லாபத்தை
குத்தகைக்கு செலுத்தி விடலாம் என்ற நிலையில், இயற்கை சீற்றத்தால் இது போன்ற பெரிய சேதாரம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக வேளாண்மை துறை அமைச்சருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நேரில் வந்து ஆய்வு செய்து சென்றிருக்கிறார்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்வது தோட்டக்கலத்துறை மற்றும் வேளாண்துறை உடனடியாக கள ஆய்வு நடத்தி இங்கு இருக்கிற விவசாயிகளுடைய பாதிப்பை கணக்கிட்டு முழு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட விவசாயிகள் சொல்வது செவ்வாழையாக இருப்பதால் கிலோ 800-ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் எனவும், பூவன் தாராக இருந்தால்
200-ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். சராசரியாக பார்த்தால் 500-ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என்பதைப் பார்க்கும் பொழுது.
ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய் குறைவில்லாமல் நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும். மேலும் காப்பீடு செலுத்துவதற்கான பிரிமியம் தொகை அதிகமாக இருப்பதால்
காப்பீடு செலுத்த முடியவில்லை விவசாயிகள் தெரிவித்தார்கள்.
காப்பீடு என்ற பிரிமியம் தொகையை விவசாயிகள் குறைந்த பாலிசி தொகையாக செலுத்துவதற்கு அரசிடம் கேட்டுக் கொள்வதாகவும் தாமதிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தங்களுக்கே உரிய பாணியில் போராட்டத்தை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
பேட்டியின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved