news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தவெகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்? அதிரடி பதில்
tv

Also Watch

tv

Read this

தவெகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்? அதிரடி பதில்

யூகங்களுக்கு பதில் இல்லை

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தொகுதி மக்களின் முடிவு தான் தனது முடிவு என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை
புதுக்கோட்டையில் உள்ள தமது இல்லத்தில், அதிமுகவிலேயே தொடருவதா? அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதா? என்று, புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில், முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுவதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தரப்பில், தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிமுகவில் எம்.எல்.ஏ. ஆக தொடர்வதா? அல்லது தவெகவில் இணைவதா? என்று நாளை இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தகவல் வெளியானது.

"தொகுதி மக்கள் விரும்புவதை செய்வேன்"
இந்த நிலையில், செய்தியாளர்களை விஜயபாஸ்கர் சந்தித்தார். அப்போது, "நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன். நான் மிகவும் நிதானமாக, பொறுமையாக அமைதியாக உள்ளேன், நிர்வாகிகளை நான் சந்தித்தது உண்மை, அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி உள்ளேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பயணிக்கிறேன்" என்று கூறினார்.

சபாநாயகரை சந்திப்பீர்களா?
நாளை சபாநாயகரை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு நிறைய திருமணங்கள் நாளை இருக்கிறது என்று, சி.விஜயபாஸ்கர் பதில் அளித்தார். மேலும், "விராலிமலை தொகுதி மக்களுக்கு நன்றி உடையவனாக நான் எப்போதும் இருப்பேன். தொகுதி மக்களின் முடிவு தான் என் முடிவு" என்று சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

யூகங்களுக்கு பதில் இல்லை
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஆதரவாளர்களின் கருத்துகளுக்கு செவிமடுத்தேன் என்று கூறிய விஜயபாஸ்கரிடம், தவெகவில் இணைய போவதாக கூறுவது பற்றிய கேள்விக்கு, "யூகங்களுக்கு பதில் இல்லை" என்று பதில் அளித்துள்ளார்.

Related Link
அதிமுக விவகாரம், மன்னிப்பு கடிதம் கேட்டதால்தான் வீராப்பா?

அதிமுக விவகாரம், மன்னிப்பு கடிதம் கேட்டதால்தான் வீராப்பா?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக தான் உண்மையான அதிமுக என அமைச்சர் ஆதவ் பேச்சு

3
6 mins agoshare
தவெக தான் உண்மையான அதிமுக என அமைச்சர் ஆதவ் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved