Also Watch
Read this
By: Web Team

அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் சாட்டை அய்யனார் கோயிலில், 36 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழாவில் இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் தெற்கு கிராமத்தில் அமைந்துள்ள சாட்டை அய்யனார் கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவை ஒட்டி புரவி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு நடைபெற்ற விழாவில் வேளாரிடம் பிடிமண் கொடுக்கப்பட்டு மண்ணால் ஆன குதிரை, காளை போன்றவை
செய்யப்பட்டது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக, மண்ணால் ஆன சிலைகளுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து,சாமி ஆட்டத்துடன் புறப்பாடு நடைபெற்றது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. 36 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதே போன்று இஸ்லாமியர்களும்
கோயிலுக்கு குதிரை சிலை வாங்கி கொடுத்தும், ஃப்ளக்ஸ் பேனர் வைத்தும் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.