news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ்
tv

Also Watch

tv

Read this

பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ்

குப்பிச்சிபாளையம், கோயம்புத்தூர்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பேருந்து சேவை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் சுமார் 1,800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.அங்கு ஹவுசிங் போர்டு தொடங்கிய காலத்தில் இருந்து முறையாக பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியோர்,தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

அதனையடுத்து கடந்த வாரம் அந்த பகுதி மக்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வடக்கு மாவட்ட தலைவர் கோவை எஸ்.மஹேந்திரன், மாநில துணைத் தலைவர் பிரின்ஸ் சுந்தர் அண்ணாச்சி உள்ளிட்டவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு இருந்தது.

மேலும் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் இந்தபிரச்சினையை நேரில் ஆய்வு செய்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்து சேவையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.


இந்த நிலையில் இன்று முதல் 104-ஆம் எண் அரசு பேருந்து சேவை குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு பகுதி வரை சுமார் 3 கிலோமீட்டர் நீட்டிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதன் மூலம் 1,800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாக பயனடைய உள்ளன.

இதனையடுத்து குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்து 104 அரசு பேருந்தின் முதல் பயனத்தை பச்சை கொடி அசைத்து கனிமொழி MLA தொடங்கிவைத்து அந்த பேருந்தில் பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

MLA-வுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டை சேர்ந்த மக்கள் சால்வைகள் அனுவித்து நன்றி தெரிவித்தனர். மேலும் ஹவுசிங் போர்டு பகுதியில் நிலவிவரும் சாக்கடை
பிரச்சனைகள், அங்கன்வாடி மையத்திற்கு காம்பவுண்ட் உள்ளிட்ட பல கோரிக்களை மனுக்களாக பொதுமக்கள் வழங்கினர்.


தொடர்ந்து எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் பேசும்போது, எப்போதுமே புதுசா கொண்டாடுவது போலவே இப்பவும் கொண்டாடி வருகிறீர்கள். ஏதாவது உங்களுக்கு செய்துவிட வேண்டும் என்ற ஆசையை அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு ஏரியாவுக்கு வரும்போது, மக்களுக்கு ஏதாவது செய்துவிட்டுதான் வரவேண்டும் என்று இருக்கிறேன். சால்வைகள், மாலை மரியாதைகள் நீங்கள் செய்யும்போது எனக்கு ஒருவிதமாக கூசுது. ஏதாவது உங்களுக்கு செய்தா தான் நல்லா இருக்கும்.

நம் CM சாருக்கு நமது தொகுதியில் செய்யவேண்டியதை அனுப்பியுள்ளேன். தொடர்ந்து 5 வருடத்திற்கான அனைத்தும் அனுப்பியுள்ளேன்.இதே பார்த்தே சாக் ஆயிருப்பார். அப்படி இருக்கு அத்தனை வேலைகள் செய்யபோகிறோம்.
இனிமேல் சால்வைகள் போடுவதை நிறுத்திவிட்டு அதற்குபதிலாக அந்த பணத்தை நல்ல காரியத்திற்கு உபயோகப்படுத்தலாம்.

ஞாயிற்றுகிழமை முடிந்து திங்கள் கிழமையன்று பள்ளிக்கு குழந்தைகள் செல்வதுபோல தான் நமக்கும் இருக்கு. அப்படி தான் வேலை செய்து வருகிறோம்.எனக்கு சால்வைகள் போடுவிதமான எந்தவிதமான மரியாதைகளும் வேண்டாம்.

உங்கள் ஒத்துழைப்பும், ஆதரவும் மற்றும் லவ்வும் மட்டும்போது என்று கூறினார். இந்த விழாவில் தமிழக வெற்றி கழக ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Related Link
குடிநீர் வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர் வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாக்கை மடித்து செய்தியாளர்களிடம் அத்துமீறிய தூத்துக்குடி ADSP

3
11 hrs 30 mins agoshare
TUT ADSPbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau