தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்களின் கும்பிடு சரணம் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் திருமலைக்குமரன் எழுந்தருள திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.