Also Watch
Read this
By: Web Team

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில், ஸ்கேன் எடுக்கும் ஊழியரை காலால் உதைத்து தாக்கிய சட்டக்கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர். செவ்வாய்கிழமை அன்று மருத்துவமனைக்கு வந்த மாணவி கிரிஜா என்பவர், உடன் வந்த உறவினருக்கு உடனடியாக ஸ்கேன் எடுக்கும்படி சொன்னதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பதிவு செய்தவர்கள் காத்திருப்பதால் வரிசைப்படிதான் ஸ்கேன் எடுக்க முடியும் என ஊழியர் வில்லியம் தெரிவித்த நிலையில், கிரிஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், காலால் எட்டி உதைத்தார். இதுகுறித்து வில்லியம் கொடுத்த புகாரின் பேரில், கிரிஜா மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.