Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில், பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தில் தற்காலிகமாக திறக்கப்பட்ட நீதிமன்ற அறையில் டாக்டர் அம்பேத்கர் படம் இல்லாதது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட நீதிபதி பூங்குழலி இருசன், புதிய நீதிமன்ற அறையை ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் தொடங்கி வைத்தார். இந்நிலையில், நீதிமன்ற அறையில் மகாத்மா காந்தியடிகள் படம் இடம்பெற்ற நிலையில், சட்டமேதை அம்பேத்கர் போட்டோ இடம்பெறவில்லை என வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.