Also Watch
Read this
By: Manigandan Raja

லாட்டரி விற்பனை அம்பலம் :
சேலம் மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கேரளா லாட்டரி விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரமனூர் பகுதியில் கேரளாவில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து அந்த லாட்டரி டிக்கெட்டுகளை இங்கு விற்பனை செய்யப்படுவதாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து நமது செய்தி குழுவினர் அங்கு சென்று முதலில் விசாரித்தனர் அப்போது அங்கு ஒரு வீட்டின் முன்பு அமர்ந்து ஒரு நபர் லாட்டரி டிக்கெட்டுகளை சந்தை கடையில் விற்பனை செய்வது போல் விற்பனை செய்து கொண்டிருந்தார் அப்போது நமது செய்தியாளர் அவர் அருகில் உட்கார்ந்து அண்ணே ஒரு லாட்டரி டிக்கெட் எவ்வளவு என கேட்டதற்கு 50 ரூபாய் என கூறி அங்கிருந்து தன் பணியை தொடங்கினார்.
ஆனால் நமது செய்தி குழுவினர் அவர்களை படம் பிடித்துக் கொண்டிருப்பதை அவர் கண்டு கொள்ளவில்லை ஒரு கட்டத்தில் கேமராவை பார்த்ததும் விட்டால் போதும் என தலை தெரிக்க ஓடினார் அப்போது அந்த வழியாக காரில் வந்த நபர் ஒருவர் ஆமா இங்க என்ன கூட்டமா இருக்கு என்ன பிரச்சனை? நீங்களும் எதுக்கு இருக்கீங்க என மிரட்டும் தூணியில் கேள்வி எழுப்பினார்.
இதனை அடுத்து நமது செய்தியாளர் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவரும் வந்த வழியே திரும்பிச் சென்றார் பின்னர் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் நமது ஒளிப்பதிவாளர் வைத்திருந்த
கேமராவை பிடுங்கி தப்பி செல்ல முண்டனர் உடனடியாக நமது செய்தியாளரும் அவரை விரட்டி பிடித்து அவர் கையில் வந்த கேமராவை வாங்கியதும் அவர் தப்பி சென்றார்.
முன்கூட்டியே நமது செய்தி குழுவினர் இதுபோன்று சம்பவம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிவித்துவிட்டு தான் அங்கு சென்றார்கள் ஆனால் தற்போது வரை எந்த ஒரு போலீஸ் சாரும் அந்த பகுதிக்கு வந்து விசாரணை நடத்தாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved