Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 02:31 PM
By: Manigandan Raja

கழிவு நீரால் தொற்று ஏற்படும் அபாயம் :
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீகத் தலமாகவும் விளங்கும் இங்கு தினந்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர்.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் வீதிகள் தோறும் சாக்கடை கழிவு நீர் வழிந்தோடுகிறது. நாகூர் தர்கா அலங்கார வாசல், மார்க்கெட், தர்கா கிழக்கு வாசல் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் சாலைகள் முழுவதும் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு தோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மூக்கை பிடித்துக் கொண்டு முகம் சுளித்தவாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலைகளில் வழிந்தோடும் கழிவு நீரை சுத்த செய்யவும், கழிவு நீர் வாய்க்கால்களை தூர்வாரி நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved