Also Watch
Read this
By: Web Team

திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கி, தன்னை ஏமாற்றி விட்டதாக, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஜாய் கிரிஸில்டா என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
மாதம்பட்டி ரங்கராஜும், நானும் சில ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல், ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அதன்பிறகு எம்ஆர்சி நகர் அம்மன் கோயிலில், என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால், எங்களது திருமணத்தை பதிவு செய்யவில்லை.
இதற்கிடையில், குழந்தை உருவாகியிருப்பது குறித்து வெளியே சொன்னதற்கு பிறகு, மாதம்பட்டி ரங்கராஜ் என்னை சந்தித்தார். கருவைக் கலைக்கச் சொல்லி என்னை அடித்து துன்புறுத்தினார்.
அதன்பிறகு, அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவருக்கு திருமணம் நடந்துள்ளது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது.
எனக்கு அவருடன் சேர்ந்து வாழ வேண்டும். அவருடன் என்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என மனு, காவல்துறையிடம் கொடுத்துள்ளேன்.
இவ்வாறு ஜாய் கிரிஸில்டா கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved