news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற் பயிற்சி மையத்தில் முறைகேடு
tv

Also Watch

tv

Read this

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற் பயிற்சி மையத்தில் முறைகேடு

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL

பயிற்சி மையத்தில் முறைகேடு :

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பயிற்சி மையத்தில் நான்கு பிரிவுகளுக்கு இலவச சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாக கூறப்படும் நிலையில் முறையாக மாணவர் வருகை பதிவேடு பராமரிக்கப்படாமல் வகுப்பிற்கு வராத சிலருக்கும் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி உள்ளிட்டவை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் வகுப்பிற்கு வரும் மாணவ மாணவிகளின் கையெழுத்தை முறைகேடாக போட்டு மடிக்கணினிகள் வாங்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக நச்சு கலந்த காற்று, குடிக்க தண்ணீர் வசதி, பூட்டியோ கிடக்கும் கழிவறை, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் ஷு, துருப்பிடிக்கும் புதிய மிதிவண்டி உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பும் மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தொந்தரவு கொடுத்து வலுக்கட்டாயமாக மாற்று சான்றிதழ் வாங்க வலியுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மாணவிகள் பலர் படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்படுவதாகவும் தெரிகிறது.

இதனை தட்டி கேட்டாலும் குடும்பத்தினரிடம் தெரிவித்தாலும் அந்த மாணவ மாணவிகள் காழ்ப்புணர்ச்சியுடன் மாணவர்கள் தரப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பாக மாணவி ஒருவர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அளித்த புகாரின் அடிப்படையில்.

செய்தி சேகரிக்க சென்றபோது செய்தியாளர்களை பார்த்த நிர்வாக முதல்வர் ராஜலட்சுமிஉடனடியாக மாணவிகளின் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி வாங்கி மறைத்து வைத்திருந்த லேப்டாப்புகளை மாணவிகளிடம் ஒப்படைத்தார் ஆனால் மாணவிகள் வாங்க மறுத்து உயர் அதிகாரிகள் வந்தவுடன் வாங்கிக் கொள்வதாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அடிப்படை வசதிகள், வருகைப் பதிவேடு பராமரிப்பில் குளறுபடி, இலவசங்கள் வழங்குவதில் முறைகேடு போன்ற நிர்வாக முதல்வர் ராஜலட்சுமியின் அத்துமீறல் தற்போது கல்வி வட்டாரத்தில் பேசும் பொருளை மாறி உள்ளது.

Related Link
புகழூர் அருகே காவிரியில் மணல் திருட்டு

புகழூர் அருகே காவிரியில் மணல் திருட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
25 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved