news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்...
tv

Also Watch

இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்...

திண்டுக்கல்

53

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
dgl 2(2)

இஸ்ரேல் ஈரான் அமெரிக்கா இடையேயான போரால் இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக சிலிண்டர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஹோட்டல்களை உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் கூட இப்படி ஒரு நெருக்கடியை எதிர்கொண்டதில்லை என கூறுகின்றனர் திண்டுக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள்.

கச்சா எண்ணெய் இறக்குமதி தடை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிவாயு போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹேர்மூஸ் நீரினையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெய் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு
இந்த நிலையில் உணவகங்கள் ஹோட்டல்கள் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பயன்படும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலையில் மார்ச் 12ஆம் தேதி முதல் பல உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். சிலிண்டர் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஹோட்டல்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடஇந்திய உணவுகள் தயாரிக்கப்பட மாட்டாது
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு ஹோட்டல்களில் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சைனீஸ், வடஇந்திய உணவுகள் தயாரிக்கப்பட மாட்டாது என ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஹோட்டல்களுக்கு நெருக்கடி
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க மாநில தலைவரும் திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவருமான ராஜ்குமார் பேசுகையில்,” ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக தமிழகத்தில் ஹோட்டல்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர் கிடைக்காததால் உணவு மெனுக்களில் மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அடுப்புகள் தொடர்ந்து எரியும் வகையில் தயாரிக்கப்படும் உணவுகளான சைனீஸ், வட இந்திய துரித உணவுகள், தோசை உள்ளிட்டவை இனி விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இட்லி, சப்பாத்தி, கலவை, சாதம் மட்டும்தான்
இட்லி, சப்பாத்தி, கலவை, சாதம் உள்ளிட்ட உணவுகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம். மேலும் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே இந்த
விற்பனையும் இருக்கும். மதியம் 2 மணி நேரம், இரவு 2 மணி நேரம் என விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அது மட்டும் அல்லாமல் கொரோனா காலத்தில் கூட லாக் டவுன் ஏற்பட்டபோது எரிவாயு தட்டுப்பாடு ஏற்படவில்லை .ஆனால் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. வட இந்திய உணவுகளை தயாரிக்கும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Link
நான் தாண்டா முதலில் சைட் அடிச்சேன் அந்த பொண்ண....

நான் தாண்டா முதலில் சைட் அடிச்சேன் அந்த பொண்ண....



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved