Also Watch
Read this
By: Manigandan Raja

கோவில் மாசி மாத திருவிழா :
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி காளியம்மன் கோவில் மாசி மாத திருவிழா கடந்த வரும் பூச்சாட்டுதல்களுடன் தொடங்கியது.
தினந்தோறும் காளியம்மன் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த இந்நிலையில் இன்று பால்குடம் ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக வெள்ளாண்டிவலசு பகுதியில் தொடங்கிய இந்த பால்குடம் ஊர்வலம் காந்தி நகர், புதிய பேட்டை, பழைய பேட்டை, நடுத்தெரு வழியாக ஸ்ரீ ஓம் சக்தி காளியம்மன் கோவில் வரை வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த பால்குடம் ஊர்வலத்தில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ ஓம் சக்தி காளியம்மன் சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved