Also Watch
Read this
By: Manigandan Raja

மழையில் நனைந்து நெற்பயிர்கள் சேதம் :
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் தாலுகா சாயமலை ஊராட்சிகுட்பட்ட சிதம்பராபுரம் கிராமத்தில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் 60 நாட்கள் விளைந்த நெற்பயிரை அறுவடை செய்து முடித்தனர். இந்த நிலையில் 90 நாட்கள் நெற்பயிர்கள் இன்னும் 10 முதல் 15 நாட்களில்
அறுவடைக்கு தயாரக இருந்த நிலையில் தற்போது இரண்டு தினங்களாக திடீரென பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் மழையில் நனைந்து சாய்ந்தன.
சுமார் 15 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் சேதமாகி உள்ளதால் அரசு இதனை கவனத்தில் கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது பற்றி செல்லத்துரை என்ற விவசாயி கூறும் போது 15 நாட்களில் அறுவடை செய்யப்பட இருந்த நெல்மணிகள் மனையில் நனைந்தது மிகுந்த கவலை அளிக்கிறது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என படபடப்போடு தெரிவித்த அவர் இதுவரை துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் பார்வையிட வரவில்லை என்றும்.
உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கோரிக்கை நிறைவேற்ற போராட்டம் நடத்தவோம் எனவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved