2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால், திமுக தனது கூட்டணி கட்சிகளை கெஞ்சி வரும் நிலை உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் கலவரம் எனக்கூறும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி கள ஆய்வுப் பணியை பாதியில் முடித்து சென்றது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.