நாமக்கல் அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காரைக்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி மகன் ஜீவரத்தினம் திருச்சி தொட்டியம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் ராசிபுரம் முத்துகாளிப்பட்டி அருகே தனது டூவீலரை நிறுத்திவிட்டு, மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.