சென்னை மதுரவாயல் வக்கீல் தோட்டம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் கல்லூரி உதவி பேராசிரியர், முகம் பிளாஸ்டிக் பையால் மூடப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குன்றத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரகாகர்குமார் கவார், வக்கீல் தோட்டம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார். தனியாக வசித்து வந்தவர் வீட்டின் கழிவறையில் முகத்தில் பிளாஸ்டிக் கவர் கட்டி இறந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து உடலை மீட்டு போலீசார் பிரகாகர்குமார் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.