Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சித்தூர் கேட் பகுதியில் கழிவுநீர் இணைப்பு கால்வாய் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில், கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததால், மழைக் காலங்களில் மழைநீரும் கழிவுநீரும் வெளியேறி சாலையில் தேங்குவதாக கூறப்படுகிறது.
எனவே, பழைய கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்த பின்னரே இணைப்பு கால்வாய் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.