Also Watch
Read this
By: Manigandan Raja

நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் :
பரமக்குடி அருகே வேந்தோணி ரயில்வே கேட் சூறாவளி காற்றால் உடைந்து உயர் அழுத்த மின்கம்பிகள் மீது விழுந்ததில் மின்கம்பிகள் அருந்து விழுந்ததால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது
ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரத்திற்கு 16104 என்ற விரைவுவண்டி தினசரி இயக்கப்படுகிறது. இந்த ரயில் பரமக்குடிக்கு மாலை 5.18 மணிக்கு வருவது வழக்கம். இன்று மாலை பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக சந்தை கடை அருகே ரயில்வே கேட் உடைந்து விழுந்து உயிர் மின்னழுத்த கம்பியின் மீது விழுந்துள்ளது இதில் உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயில் பரமக்குடி ரயில் நிலையத்திற்கு முன்பு உள்ள வேந்தோணி ரயில்வே கேட் முன்னதாக நடுவழியில் நின்றது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ரயில் நடுவழகயில் நிற்பதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். அதேபோல் ரயில்
நடுவழியில் நிறுத்தப்பட்டதால் வேந்தோணி ரயில்வே கேட் அடைக்கப்பட்டது.
இதனால் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் தினசரி ரயில்கள் ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved