Also Watch
Read this
By: Manigandan Raja

ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம் :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும், இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர், இந்நிலையில் இன்று வத்தலக்குண்டு செல்லும் பிரதான மலை சாலையில் அருகே ஆபத்தான முறையில் தார் ஜீப் வாகனத்தில் மேல் பகுதியில் நின்றபடியும் , ஜன்னல் வழியாக வெளியே அமர்ந்தும் இளைஞர்கள் பயணம் செய்துள்ளனர்.
தொடர்ந்து கோடை சீசன் மற்றும் மழை காலம் தொடங்கிய நிலையில் மலை சாலையில் ஆங்காங்கே சிறிய பள்ளங்கள் மற்றும் குறுகிய வளைவில் வாகனங்கள் எதிரே வேகமாக
வரும் நிலையில் வாகனத்தில் திடீர் பிரேக் பிடிக்கும் சூழலில் பெரும் விபத்து ஏற்படும் நிலை உருவாகும்.

எனவே சுற்றுலா செல்லும் ஆர்வத்தில் இது போன்ற நிகழ்வுகளால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக போக்குவரத்து காவல் துறையினர் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளுக்கு மலைச்சாலையில் சாலைவிதிகளை பின்பற்றி பயணிக்க விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்றும்.

இது போன்று ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்கள் மீதும் அவர்களை எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் ஆபத்தான முறையில் ஏற்றி செல்லும் வாகன ஓட்டுனர்கள்
மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ப தே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved