Also Watch
Read this
By: Manigandan Raja

ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லை - ஸ்ரீலீலா தரப்பு :
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா மற்றும் நடிகை ஸ்ரீலீலா காதலித்து வருவதாக தகவல் பரவி வந்த நிலையில், ஸ்ரீலீலா தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்தி முற்றிலும் தவறானவை என்றும், இந்த வதந்திகளில் ஒரு சதவிகிதம் கூட உண்மை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் முத்துக்காளை மனைவியின் உடல் அடக்கம் :
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நகைச்சுவை நடிகர் முத்துக்காளை மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சொந்த ஊரான திருக்கோதையாபுரம் கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
திகிலூட்டும் படமாக டிமாண்டி காலனி-3 இருக்கும் :

டிமாண்டி காலனி-3 திரைப்படம் மிகவும் விறுவிறுப்பான, திகிலூட்டும் வகையில் இருக்கும் என்றும், படம் பார்த்து விட்டு யாரும் பயப்படாமல் திரையரங்கை விட்டு வெளியேற முடியாது எனவும் இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறினார். அதோடு, டிமாண்டி காலனி திரைப்படத்தை 6 பாகங்கள் வரை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் :

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் "Pocket Novel" திரைப்படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
முதல்வர் விஜய் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார் :

முதலமைச்சர் விஜய் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர் என நடிகர் சிவகார்த்திகேயன் புகழாரம் சூட்டினார். மதுரை மாவட்டம் செக்கானூரணியில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. பூஜைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் துறையில் இருந்த ஒருவர் முதலமைச்சராகியிருப்பது பெருமையாக இருப்பதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved