news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews நேற்றைய போட்டியிலும் விளையாடாத தோனி
tv

Also Watch

tv

Read this

நேற்றைய போட்டியிலும் விளையாடாத தோனி

தோனி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தோனி

சிஎஸ்கே வீரர்களுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் :

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ஆஸ்தான நாயகன் தோனி விளையாடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நேற்றைய போட்டியிலும் ஏமாற்றமே மிஞ்சியது. போட்டி முடிந்த பின்னர் சென்னை அணி வீரர்களுடன் மைதானத்தில் அமர்ந்து தோனி குழு புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டார்.

பின்னர் மைதானத்தை சுற்றி வந்து, ரசிகர்களுக்கு கை காட்டி உற்சாகப்படுத்தினார்.

ஐபிஎல் தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதி :

நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு, குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் நான்காவதாக தகுதி பெற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சென்னை, டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளின் பிளே-ஆப் கனவு ஏறக்குறைய மங்கிப் போனாலும், மற்ற லீக் போட்டிகளின் முடிவை பொறுத்தே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது.

ஜாம்பவான் தோனியின் சாதனையை முறியடித்த சாம்சன் :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜாம்பவான் எம்.எஸ். தோனியின் 13 வருட சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்து அசத்தியுள்ளார். ஒரு சீசனின் சென்னை அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோராக 461 ரன்கள் என்பதே சாதனையாக இருந்தது. இதனை முறியடித்த சஞ்சு சாம்சன் நடப்பு சீசனில் 477 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவை பின்னுக்கு தள்ளி கம்மின்ஸ் அசத்தல் :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கேப்டனாக விளையாடி அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியாவை பின்னுக்கு தள்ளி பேட் கம்மின்ஸ் சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியின் போது சென்னை வீரர்கள் மூவரின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் மொத்தமாக 42 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.

தோல்வியால் மிகவும் வேதனை அடைந்தேன் :

ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்வியால் மிகவும் வேதனை அடைந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் கூறினார். தோல்விக்கு பின் பேசிய ருத்ராஜ், சேப்பாக்கம் மைதானத்தில் 180 ரன்களை வைத்தே DEFEND செய்யலாம் என நினைத்த தாகவும், பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருப் போம் எனவும் கூறினார்.

Related Link
IPL 2026 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் RCB

IPL 2026 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் RCB

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யானைகளின் கால்களுக்கு அடியில் இளம்பெண், அதிர்ச்சி சம்பவம்

7
45 mins agoshare
யானைகளின் கால்களுக்கு அடியில் இளம்பெண், அதிர்ச்சி சம்பவம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved