கனமழை முன்னெச்சரிக்கையாக, சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, வினாடிக்கு 600 கன அடியில் இருந்து ஆயிரத்து 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 100 கன அடியாக உள்ள நிலையில், சென்னை குடிநீருக்காக 165 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 24 அடியில் 21.39 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில், 2957 மில்லியன் கன அடியும், நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில், கடந்த 21ஆம் தேதியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குன்றத்தூர், காவனூர், வழுதளமேடு, திருநீர்மலை, திருமுடிவாக்கம் அனகாபுத்தூர் உள்ளிட்ட அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையும் பாருங்கள் - திடீரென நீர் திறப்பு, சென்னைக்கு ஆபத்தா? | poondi dam | Chennai