திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மதுபானக் கடையின் இரும்பு ஷட்டரை கட்டர் இயந்திரம் மூலம் துளையிட்டு உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. நேமலூர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் புகுந்து மர்ம நபர் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளயடித்துச் சென்ற நிலையில் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் அந்நபரை தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள மதுபானக் கடைகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வரும் நிலையில் ரோந்து பணியை தீவிர படுத்த போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.