வீட்டு வாசலில் தலையில் பலத்த ரத்தக் காயங்களோடு சடலமாக கிடந்த 55 வயது நபர். சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த கொலையாளியின் முகம். செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து கொலையாளியை கையும் களவுமாக பிடித்து விசாரித்த போலீஸ். விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல். 55 வயது நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?கதவை திறந்து வெளியே வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சிஜனவரி 20ம் தேதி. அதிகாலை 3.30 மணி. வீட்டுக்கு வெளியில தூங்கிட்டு இருந்த தந்தை சிவசுப்பிரமணியன எழுப்புறதுக்காக அவரோட மகள் கதவ தொறந்துட்டு வெளியில வந்துருக்காங்க. அப்ப தந்தை தலையில பலத்த காயங்களோட ரத்தம் வடிந்தபடி உயிரிழந்து கிடந்துருக்காரு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச மகள் கத்திக் கதறி அழுதுருக்காங்க. சத்தத்த கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களும், வீட்டுக்குள்ள தூங்கிட்டு இருந்த தாயும் ஓடி வந்துருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து சிவசுப்பிரமணியனோட மனைவி கிட்டயும், கிராம மக்கள் கிட்டயும் போலீஸ் விசாரணையில இறங்கிருக்காங்க. அடையாளம் தெரியாத நபர்கள் யாரும் கிராமத்துக்குள்ள வந்தாங்களா, உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்குதான்னு கேட்ருக்காங்க. அதுக்கு கிராம மக்கள் எங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. அடுத்து அந்த ஏரியாவுல உள்ள சிசிடிவி காட்சிகள எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க போலீஸ்.சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த கொலையாளி அப்ப கரைக்டா 1.20 மணிக்கு மர்ம நபர் ஒருத்தரு சிவசுப்பிரமணியன, கொலை செஞ்சுட்டு தப்பிச்சு போன காட்சி பதிவாகியிருந்துருக்கு. சிசிடிவி காட்சியில பதிவாகியிருந்த உருவத்த வச்சு விசாரிச்சதுல அவரு, அதே பகுதியை சேந்த 25 வயசான ராதாகிருஷ்ணன்னு தெரியவந்துச்சு. இதனால உடனே ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு போய்ருக்காங்க போலீஸ். ஆனா வீட்ல ராதாகிருஷ்ணன் இல்லை. இதனால அவரு தான் கொலையாளின்னு கன்பார்ம் பண்ண போலீஸ், அவரோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணி விசாரிச்சுருக்காங்க. அதவச்சு அதே ஏரியாவுல பதுங்கியிருந்த ராதாகிருஷ்ணன கஸ்டடியில எடுத்து விசாரிச்சதுல தான், பல உண்மைகள் வெளியவந்துருக்கு.காதல் ஜோடியை கண்டித்த சிவசுப்பிரமணியன்திருச்சியில உள்ள மணப்பாறை காவல்காரன்பட்டியை சேந்தவர் ராதாகிருஷ்ணன். பட்டியல் இனத்தைச் சேந்த இவரும் மாற்று சமுதாயத்தை சேந்த 15 வயசு சிறுமியும் நீண்ட நாட்களாக காதலிச்சுட்டு இருந்துருக்காங்க. இத தெரிஞ்சுக் கடும் கோபமான அதே பகுதியை சேந்த 55 வயதான சிவசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன கண்டிச்சுருக்காரு. நீ காதலிக்குறது எங்க சமூகத்தை சேந்த சிறுமிய, அதனால நாங்க உங்க காதலுக்கு சம்மதிக்க மாட்டோம், அந்த சிறுமி கூட பேசுறத நீ நிறுத்திக்கோ, இல்லன்னா தேவையில்லாத பிரச்னை வரும்ன்னு அட்வைஸ் பண்ணிருக்காரு. அதே மாதிரி படிக்குற வயசுல எதுக்கு காதல் பண்ணி, உன் வாழ்க்கையவே கெடுத்துக்கிற, அவங்க சாதிக்கும், நம்ம சாதிக்கும் செட் ஆகாது, அதனால நீ படிச்சு முடிச்சுட்டு நம்ம சாதி இளைஞர கல்யாணம் பண்ணிக்கோன்னு அந்த சிறுமியவும் அறிவுறுத்திருக்காரு. இத கேட்டு கடுப்பான சிறுமி, இது என் வாழ்க்கை, நான் பாத்துக்கிறேன், தேவையில்லாம எங்களோட காதல் விஷயத்துல நீங்க தலையிடாதிங்கன்னு சொல்லிருக்காங்க. அதுக்கு சிவசுப்பிரமணியன், ரெண்டு பேரும் இனிமே காதலிக்க கூடாது, அதையும் மீறி காதலிச்சிங்கன்னா ரெண்டு பேரையும் சும்மா விடமாட்டேன்னு மிரட்டிருக்காரு. இதனால கடும் கோபமான சிறுமியும், காதலன் ராதாகிருஷ்ணனும் சிவசுப்பிரமணியன கொலை செய்ய திட்டம் போட்ருக்காங்க.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்த போலீஸ்சம்பவத்தன்னைக்கு வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு போன சிவசுப்பிரமணியன் நைட்டு சாப்பாட்ட முடிச்சுட்டு வீட்டு வாசல்ல படுத்து தூங்கிட்டு இருந்தாரு. இத தெரிஞ்சுக்கிட்டு அங்க வந்த ராதாகிருஷ்ணன், இரும்பு ராடால சிவசுப்பிரமணியனோட தலையிலையே ஓங்கி அடிச்சுருக்காரு. இதுல சம்பவ இடத்துலையே உயிரிழந்துட்டாரு சிவசுப்பிரமணியன். அடுத்து தன்னோட தம்பியவும் அவரோட நண்பரையும் ஸ்பாட்டுக்கு வரவச்ச சிவசுப்பிரமணியன், அவங்க கூடவே பைக்ல தப்பிச்சு போய்ட்டாரு. ஆனா சிசிடிவி காட்சி மூலமா எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், காதலன் ராதாகிருஷ்ணனையும், 14 வயது சிறுமியவும், கொலையாளிய தப்பிக்க வைக்க உதவியா இருந்த சேரன் உள்ளிட்ட 4 பேரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. Related Link 2 குடும்பங்களுக்கு இடையேயான பகை