news-tamil-logo

3/16/2026, 9:06:11 PM

news-tamil-logo
more
Home districtnews ரூ.1.5 கோடி சொத்து அபகரிப்பு - அதிமுக நிர்வாகி கைது
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

ரூ.1.5 கோடி சொத்து அபகரிப்பு - அதிமுக நிர்வாகி கைது

அண்ணா நகர், சென்னை

Posted on: Mar 01, 2026 01:14 PM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN land issue

அதிமுக நிர்வாகி கைது :

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சென்னை ஜி.கே.எம் காலனி பிரகாசம் தெருவில் வசிக்கும் பார்த்தசாரதி (65) கடந்த 2025 ஆண்டு மே மாதம் 29ம் தேதி புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரில் நான் 1991-ம் வருடம் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டம், சூரப்பட்டு கிராமம், பிரிட்டாணியா நகரில் 2400 சதுரடி காலி மனையை 23.10.1991-ந் தேதி அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கிரையம் பெற்று அனுபவத்து வந்ததாக கூறியுள்ளார்.

அதன் பிறகு அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெற்று பரிசீலனை செய்ததில் மேற்படி சொத்தில் போலியான ஆவணங்கள் தயாரித்து பதிவு செய்துள்ளது தெரிய வந்தது.

அதில் என்னை போன்று ஒரு நபர் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயாரித்து எனக்கு சொந்தமான சொத்தின் மீது எனது ஆதார் கார்ட் பயன்படுத்தி பக்தவச்சலம் என்பவருக்கு 2021 ஆம் ஆண்டில் பொது அதிகாரம் கொடுத்தும், பின்னர் பக்தவச்சலம் என்பவர் நடராஜன் என்பவருக்கு 1200 சதுரடி மற்றும் ராஜேஷ் என்பவருக்கு 1200 சதுரடி விற்பனை செய்துள்ளதாகவும், பின்னர் நடராஜனும், ராஜேஷ் சேர்ந்து அனிதா என்பவருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர் அனிதா மேற்படி சொத்தை ஹெச்டிஎஃப்சி வங்கியில் அடமானம் வைத்து ரூ.1,27,11,341/- கடன் பெற்று எனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி சொத்தை அபகரிக்கும் நோக்கில்
ஆள்மாறாட்டம் செய்தள்ளனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்து இருந்தார்.ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர், கூடுதல் காவல் துணை ஆணையர் மற்றும் காவல் உதவி ஆணையர் கோவிந்த் மேற்பார்வையில், ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 05.06.2025 திருவான்மியூர் சிங்காரவேலன் தெரு பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் (54) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் முக்கிய குற்றவாளியை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம்
அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அதிமுக அண்ணா நகர் பகுதி செயலாளர் பிரசன்னா என்பவரை நேற்று கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள நடராஜனும், ராஜேஷ் மற்றும் அனிதா ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் தற்போது அண்ணா நகர் கிழக்குப் பகுதி செயலாளர் கே.பிரசன்னகுமார் அதிமுக பிரமுகர்களுடன் புகைப்படம் போஸ் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றுவதே இவரது பிழைப்பு என்கின்றனர் அதேபோல் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் பொதுமக்கள் எழுப்புகின்றனர் அவரது பகுதியில் மாமுல் வாங்குவது, பஞ்சாயத்து முடிப்பது.

காலியாக உள்ள இடங்களை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்வது, வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெறுவது, கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி பணம் பெறுவது, போன்ற பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது..

இவர் மீது மேலும் பல்வேறு புகார்கள் குவியும் என கூறப்படுகிறது.

Related Link
டூ வீலருடன் கிணற்றுக்குள் விழுந்த வட மாநில இளைஞர்

டூ வீலருடன் கிணற்றுக்குள் விழுந்த வட மாநில இளைஞர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
4 hrs 43 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved