news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எனக்கும் அதே ரூல் தான்...
tv

Also Watch

tv

Read this

எனக்கும் அதே ரூல் தான்...

திருப்பத்தூர்

16

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tpt

தேர்தல் நடைமுறையை ஒட்டி பொதுமக்கள் 50,000 உள்ளான பணம் மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும், எனக்கும் அதே ரூல் தான் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பான தேர்தல் அட்டவணையை தெரிவித்தார்.

வாக்கு சாவடி எண்ணிக்கை 1,202
அதன் பின்னர் திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளின் வாக்கு சாவடி எண்ணிக்கை 1,202 எனவும் வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 541 எனவும் கூறினார். அதேபோல மாவட்டத்தின் மொத்த ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 44,9464, பெண் வாக்காளர் எண்ணிக்கை 46,1996 மூன்றாம் பாலினத்தவர் 139 என மொத்தம் 91,1599 ஆகும் எனவும் தெரிவித்தார்.

எனக்கும் அதே ரூல் தான்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறையையொட்டி பொதுமக்கள் மட்டுமன்றி எம்எல்ஏ, அரசியல் கட்சி பிரமுகர்கள் ரொக்கப்பணம் 50 ஆயிரத்துக்குள்ளாக பணம் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் மேலும் எனக்கும் அதே ரூல் தான் அனுமதி மீறினால் பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மக்கள் குறை தீர் கூட்டம் ரத்து

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெறும் வாரந்தோறும் நடைப்பெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் தொடங்கப்படும் என கூறிய அவர், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களுடைய மனுக்களை போடலாம் எனவும் தெரிவித்தார். அதே போல விவசாயிகளுக்கான குறை தீர்வு நாள் தேர்தல் நடைமுறை இருக்கும் வரை கூட்டம் ரத்து செய்யப்படும் என கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவசௌவுந்தரவல்லி அறிவுறுத்தினார்.

Related Link
காசு கொண்டு போனா கரெக்டா கொண்டு போங்க...

காசு கொண்டு போனா கரெக்டா கொண்டு போங்க...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 40 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved