Also Watch
Read this
By: Web Team

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் 10 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் தேதி தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே 4 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது.
இதையும் படியுங்கள் : திருவாரூர் மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த கனமழை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved