news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழக DNAவை சிதைக்க NDA முயற்சி என ஸ்டாலின் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

தமிழக DNAவை சிதைக்க NDA முயற்சி என ஸ்டாலின் குற்றச்சாட்டு

மதுரையில் களம் காணும் வேட்பாளர்கள்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரையை மணிப்பூர் மாநிலம் போல் மாற்ற வேண்டும் என்ற என்.டி.ஏ. கூட்டணியின் சதியை முறியடித்ததாக, மதுரை மக்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் ஆரிய மாடலை கொண்டு வந்து, தமிழ்நாட்டின் DNAவை சிதைக்க NDA கூட்டணி முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

அதோடு, பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு அளிக்கும் நிதிப் பகிர்வை தமிழ்நாட்டிற்கும் வழங்கினால், மாநிலத்தின் கடன் தீர்ந்து விடும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக ஆளும் மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? என்று, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு சவால் விடுத்தார்.

மதுரையில் மு.க.ஸ்டாலின்
மதுரையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
மதுரைக்​கான வளர்ச்​சியை முன்​னெடுக்​கும் மாடல் தான் திரா​விட மாடல். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்​டணி முன்​வைப்​பது வளர்ச்​சியை கெடுக்​கும், மத நல்​லிணக்​கத்தை பாதிக்​கும் ஆரிய மாடல். மதுரை மக்​கள் புத்​தி​சாலிகள். இங்கு கலவரத்தை தூண்ட நினைத்​தவர்​களின் சதியை சிறப்​பாக முறியடித்​தீர்​​.

அமை​தி, வளர்ச்​சியை முன்​னிறுத்​தும் தமிழ்​நாட்​டின் டிஎன்​ஏவை மாற்ற நினைத்து சொந்த மண்​ணுக்​கும், சொந்த மக்​களுக்​கும் துரோகம் இழைக்​கும் கூட்​ட​ணி​யாக என்​டிஏ உள்​ளது. இவர்​கள் தான் டபுள் இன்​ஜின் என்ற டப்பா இன்​ஜின் அரசை தமிழ்​நாட்​டில் அமைக்க துடிக்​கிறார்​கள். நாட்​டிலேயே அதிக திட்​டங்​களை தமிழ்​நாட்​டில் திரா​விட மாடல் அரசு தான் செயல்​படுத்​துகிறது.

பியூஷ் கோயலுக்கு சவால்
இது தெரிந்​தும் மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் எது​வும் தெரி​யாதது​போல் பேசி உள்​ளார். தமிழ்​நாட்​டில் எந்த திட்​ட​மும் செயல்​படுத்​தப்​பட​வில்​லை. அரசின் பணம் எங்கு போகிறது? கடன் சுமை அதி​கரித்​து உள்​ளது. தமிழ்​நாடு திவாலாகப் போகிறது என எந்த புரிதலும் இல்​லாமல் பேசி​யுள்​ளார். தமிழக அரசின் பணம் மக்​களுக்கு தான் போகிறது. நான் பியூஷ் கோயலுக்கு சவால் விடு​கிறேன். தமிழ்​நாடு மத்​திய அரசுக்கு தரும் ரூ.1க்கு பதில் எவ்​வளவு திரும்​பக் கிடைக்​கிறது. பாஜக ஆளும் மாநிலங்​களுக்கு எவ்​வளவு வழங்​கப்​படு​கிறது. இந்த ஒப்​பீட்டை வெளிப்​படை​யாக அறிவிக்க முடி​யு​மா? சொன்​னால் உங்​கள் குட்டு உடைந்​து​விடும். பாஜக ஆளும் மாநிலங்​களுக்கு வழங்​கும் அதே மாதிரி​யான வரிப் பகிர்வை தமிழ்​நாட்​டுக்கு வழங்​கி​னால், தமிழ்​நாட்​டின் மொத்த கடனும் அடைந்து நிதி நெருக்​கடியே இருக்​காது.

பார்த்​துக்​கொண்டே இருங்​கள்
எங்​கள் பணத்தை வாங்​கிக் கொண்​டு, பணம் எங்கே என்று கேட்​பது நியாய​மா? தமிழ்​நாட்டை பார்த்து திவாலாகப் போகிறது என்று பியூஷ் கோயல் கூறி​யுள்​ளார். பார்த்​துக் ​கொண்டே இருங்​கள் என்​டிஏ தான் தி​வாலாக போகிறது.
இவ்​வாறு பேசி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

மதுரையில் களம் காணும் வேட்பாளர்கள்
மதுரை மாவட்ட திமுக கூட்​டணி வேட்​பாளர்​கள் அறி​முக பொதுக்​கூட்​டம் திரு​மங்​கலத்​தில் நடை​பெற்​றது.

திமுக வேட்​பாளர்​கள்
பி.மூர்த்தி - மதுரை கிழக்​கு
பழனிவேல் தியாக​ராஜன் - மதுரை மத்​திய தொகுதி
கோ.தளபதி - வடக்​கு
மணி​மாறன் - திரு​மங்​கலம்
ரகு​பாலாஜி - மேற்​கு
வெங்​கடேசன் - சோழ​வந்​தான்
கிருத்​திகா தங்​கப்​பாண்டி - திருப்​பரங்​குன்​றம்

மதி​முக வேட்​பாளர் பூமி​நாதன் - தெற்​கு

காங்​கிரஸ் வேட்​பாளர்​கள்
சரவணகு​மார் - உசிலம்​பட்​டி
விஸ்வநாதன் - மேலூர்

Related Link
இபிஎஸ் விமர்சனமும் ஸ்டாலின் பதிலடியும்

இபிஎஸ் விமர்சனமும் ஸ்டாலின் பதிலடியும்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எம்பி சீட் தருவதாக ஏமாற்றினார் இபிஎஸ் என பிரேமலதா காட்டமாக பதிலடி

3
2 mins agoshare
எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved