Also Watch
Read this
By: Manigandan Raja

போதைப் பொருள் வைத்திருந்த 4 பேர் கைது :
கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தானபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கைமாற்றப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்
அடிப்படையில் வடலூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தவச்செல்வம் மற்றும் சேகர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வடலூர் ஆபத்தான புரம் சின்னக்கண்ணு பலா தோப்பு அருகே சந்தேகத்திற்கு இடமான நின்றிருந்த வாலிபர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர்.
இதனை அடுத்து அவர்களை வடலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அரியலூர் மாவட்டம் நாமங்கலம் வடக்கு கொட்டாய் பகுதியைச்
சேர்ந்த சிவகுமார் வயது 26 மற்றும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்( 33) மற்றும் ரஹீம் ஷ அலி அவுட் , பெண்ணடம் போனூர் மேற்கு தெருவை சேர்ந்த செந்தில் வேல் (37) என தெரியவந்தது.
மேலும் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை மேற்கொண்டதில் அதில் போதைப் பொருளான மேத்த பேட்டமைன் மற்றும் அதனை பயன்படுத்த தேவையான 8 சிரஞ்சுகள்கள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 7.5 கிராம் எடை கொண்ட மேத்த பேட்டமைன் மூன்று செல்போன்கள் மற்றும் மெத்த பேட்டமைன் பயன்படுத்த தேவையான 8 சிரஞ்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த வடலூர் காவல் துறையினர் குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved